/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.54 கோடிக்கு வர்த்தகம்
/
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.54 கோடிக்கு வர்த்தகம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.54 கோடிக்கு வர்த்தகம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.54 கோடிக்கு வர்த்தகம்
ADDED : ஆக 25, 2025 10:47 PM

திருக்கோவிலுார், ; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நெல் மற்றும் மக்காச்சோள வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் ரூ. 1.54 கோடி வர்த்தகமானது.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைத்து வகையான விளை பொருட்களையும் ஆண்டு முழுவதும் கொண்டு வருவதால், வர்த்தம் சீராக உள்ளது. நேற்று 5500 மூட்டை நெல், 2000 மூட்டை மக்காச்சோளம், 250 மூட்டை கம்பு, 130 மூட்டை மணிலா என 652.66 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்திருந்தது. மக்காச்சோளம் சராசரி விலையாக மூட்டை ரூ. 2,414 க்கும், மணிலா ரூ. 7,579 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன் மூலம் நேற்றைய மொத்த வர்த்தகம் ரூ. 1.54 கோடியாக இருந்தது.
கள்ளக்குறிச்சி கமிட்டி:
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 600 மூட்டை, வேர்க்கடலை 20, உளுந்து, எள் தலா 10 மூட்டை மற்றும் கம்பு ஒரு மூட்டை என 641 மூட்டை விளை பொருட்களை கொண்டு வரப்பட்டது. சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,281, வேர்க்கடலை 7,513, உளுந்து 5,049, எள் 7,725, கம்பு 2,569 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 16 லட்சத்து 49 ஆயிரத்து 169க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் 35 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 72 ஆயிரத்து 405 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் கமிட்டியில் நெல் 1,020 மூட்டை, கம்பு 16, உளுந்து, எள் தலா ஒரு மூட்டை என மொத்தம் 1,038 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக நெல் 2,315 ரூபாய், கம்பு 2,700, உளுந்து 6,000, எள் 8,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 19 லட்சத்து 17 ஆயிரத்து 587 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.