/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தண்ணீர் இன்றி வறண்டு போகும் ஏரிகள் கிளை வாய்க்கால்கள் துார் வாரப்படுமா?
/
தண்ணீர் இன்றி வறண்டு போகும் ஏரிகள் கிளை வாய்க்கால்கள் துார் வாரப்படுமா?
தண்ணீர் இன்றி வறண்டு போகும் ஏரிகள் கிளை வாய்க்கால்கள் துார் வாரப்படுமா?
தண்ணீர் இன்றி வறண்டு போகும் ஏரிகள் கிளை வாய்க்கால்கள் துார் வாரப்படுமா?
ADDED : நவ 03, 2024 04:40 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு சுற்றி வட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் பருவ மழை பெய்தும் ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை. இப்பகுதிகளைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணையில் நீர்வரத்து அதிகரித்து பெண்ணையாற்றில் தற்போது தண்ணீர் திறந்து விட்டனர்.
அதேபோல் வலது கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் இப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. ஏரி நீரை நம்பி இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் குடிநீரை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீரின்றி வறண்டு இருப்பதால் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் விவசாயிகள், பொதுமக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் லேசான மழைக்கே ஏரிக்கு நீர் வரத்து கிடைத்து நிரம்பும். ஆனால் தற்போது, ஏரிக்குச் செல்லும் கிளை வாய்க்கால்களை பொதுமக்கள் ஆக்கிரமித்து வருவதால், துார்ந்து போவதாலும் மழை நீர் ஏரிக்குச் செல்ல வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி துறையைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மழை காலங்களில் நேரடியாக கிளை வாய்க்கால் மூலம் ஏரிக்கு மழைநீர் சென்று நிரம்ப வாய்ப்புள்ளது.
பொது மக்களின் நலன் கருதி சாத்தனுார் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை நம்பாமல் மழைக்காலங்களில் நேரடியாக வீணாகிச் செல்லும் மழை நீரை சேமிக்க கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி பராமரித்தால் குடிநீருக்கும், பாசனத்திற்கும் பஞ்சமில்லாமல் நீர் கிடைக்கும்.