/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு
/
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சலகத்தில் ஏற்பாடு
ADDED : செப் 17, 2025 11:37 PM
கள்ளக்குறிச்சி: ஓய்வூதியதாரர்கள் வருடாந்திர ஆயுள் சான்று சமர்ப்பிக்க கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் 2025ம் ஆண்டுக்கான வருடாந்திர ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 80 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியதாரர்கள் அக்., 1 முதல் நவ., 30ம் வரையிலும், மற்ற ஓய்வூதியதாரர்கள் நவ., 1 முதல் நவ., 30 வரையிலும் ஆயுள் சான்று சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.