/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூர் மார்க்கமாக பஸ், ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்க ஏற்பாடு
/
திருக்கோவிலூர் மார்க்கமாக பஸ், ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்க ஏற்பாடு
திருக்கோவிலூர் மார்க்கமாக பஸ், ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்க ஏற்பாடு
திருக்கோவிலூர் மார்க்கமாக பஸ், ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்க ஏற்பாடு
ADDED : டிச 03, 2024 06:46 AM
திருக்கோவிலூர்: திருச்சி - சென்னை வழித்தடத்தில் ரயில் மற்றும் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், திருக்கோவிலூர் வழியாக திருப்பி விடப்பட்டது.
அதீத கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் தியாகதுருகம், எலவனசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டது.
இதன் காரணமாக திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றது. வாகன ஓட்டிகளுக்கு வழி காண்பிக்கும் விதமாக ஆங்காங்கே போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதேபோல் சென்னை - விழுப்புரம் ரயில் வழித்தடம் பாதிக்கப்பட்டதால் நேற்று காலை கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை, காட்பாடி சென்று சென்னை செல்லும் வகையில் மாற்று பாதையில் விழுப்புரத்திலிருந்து திருப்பி விடப்பட்டது.
எனினும் திருக்கோவிலூர் துரிஞ்சல் ஆற்று ரயில்வே பாலத்தில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் இரண்டு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே துறை ஊழியர்களின் ஆய்வுக்குப் பிறகு காட்பாடி மார்க்கமாக சென்னைக்கு ரயில் புறப்பட்டு சென்றது.
ரயில் மற்றும் பஸ் சேவை திருக்கோவிலூர் மார்க்கமாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.