ADDED : பிப் 17, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் வழக்கறிஞர் எனக் கூறி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த ஊனத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் துரை, 36; இவர், தான் வழக்கறிஞர் என்றும், பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளதாக கூறி சின்னசேலம் மற்றும் அதனை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ஏமாற்றி வருகிறார். அவர் வழக்கறிஞர் அல்ல.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர் சங்கச் செயலாளர் பழனிவேல் சின்னசேலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, துரையை கைது செய்தனர்.