/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் வைபவம்
/
பெருமாள் கோவிலில் அம்பு போடுதல் வைபவம்
ADDED : அக் 14, 2024 09:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் நவராத்திரி பூஜையில் அம்பு போடுதல் வைபவம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரியையொட்டி தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று அம்பு போடுதல் உற்சவத்தையொட்டி காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகத்துடன் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.
மாலை 5:30 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் முன் வாழை மரம் நட்டு அம்பு போடுதல் வைபவ நிகழ்ச்சி நடத்தினர். தேசிக பட்டர் வழிபாடுகளை செய்து வைத்தார்.