/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விடுதி மாணவர்களுக்கு கலை திருவிழா
/
விடுதி மாணவர்களுக்கு கலை திருவிழா
ADDED : ஏப் 04, 2025 04:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விடுதி மாணவர்களுக்கான, கலை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுபாட்டில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கலை திருவிழா நேற்று நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா விழாவை துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 23 பள்ளி விடுதி மற்றும் 4 கல்லுாரி விடுதி மாணவ-மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பேச்சு, கட்டுரை, ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
விழாவில் அரசு ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் கலாபன், விடுதி காப்பாளர்கள் முரளி, கலைமணி, வசந்தகுமார், லட்சுமி, தேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

