/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிரிதிவிமங்கலம் ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கான கலை திருவிழா
/
பிரிதிவிமங்கலம் ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கான கலை திருவிழா
பிரிதிவிமங்கலம் ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கான கலை திருவிழா
பிரிதிவிமங்கலம் ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கான கலை திருவிழா
ADDED : ஆக 29, 2025 02:55 AM

கள்ளக்குறிச்சி: பிரிதிவிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 10 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் கலை திருவிழா போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் நோடல் பள்ளிகளைச் சார்ந்த 10 பள்ளிகளுக்குட்பட்ட ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், மாறுவேடம், செவ்வியல் நடனம், கிராமிய நடனம், ஓவியம், களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தமிழரசி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை காயத்ரி ஒருங்கிணைத்தார். ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.