/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அர்த்தநாரீஸ்வர் கோவில் தேரோட்டம்
/
அர்த்தநாரீஸ்வர் கோவில் தேரோட்டம்
ADDED : ஏப் 11, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நடந்த கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எலவனாசூர் கோட்டை, கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது.
காலை 8:30 மணிக்கு, தேரில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். இந்த நிகழ்வில், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.