UPDATED : அக் 12, 2026 07:58 PM
ADDED : அக் 12, 2026 07:44 PM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது.
ரிஷிவந்தியத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வளாகத்தில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எடுக்கப்பட்டது.
இரண்டறை மாதங்களுக்குப்பின், ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் மேற்பார்வையில் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது.
செயல் அலுவலர் ராஜாத்தி, எழுத்தர் விமல்ராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 364 ரூபாய் இருந்தது. தொடர்ந்து காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
