/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
/
செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
ADDED : அக் 01, 2025 08:59 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர், டீன் அசோக் முன்னிலை வகித்தனர். கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் தங்கவேலு வரவேற்றார். உதவி பேராசிரியர் கார்த்திகா, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
கோயம்புத்துார் பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முன்னாள் கணினி அறிவியல் துறைத்தலைவர் முரளி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு மற்றும் செயல்படும் முறைகள், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வியில் செயற்கை நுண்ணறிவு முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் உதவி பேராசிரியர்கள் கார்த்திக், பாரதி, சந்திரபிரியா, அன்பரசன், கயல்விழி, ஹேமவர்தினி, விஜமலாஜென்சி, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.