/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலைஞர் கனவு இல்ல திட்டம் பயனாளிகள் 'உஷார்'
/
கலைஞர் கனவு இல்ல திட்டம் பயனாளிகள் 'உஷார்'
ADDED : மே 24, 2025 12:16 AM
கள்ளக்குறிச்சி:மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26ம் ஆண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, 5,500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், ஒன்றியம் வாரியாக தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்வான பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவியை, அவர்களது வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு செலுத்துகிறது. பயனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்நிலையில், பொதுமக்களிடம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வாங்கித்தருவதாக தனி நபர்கள் பணம் கேட்டு ஏமாற்ற முயற்சிப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இது போன்ற செயலில் ஈடுபடும், உள்ளாட்சி பிரதிநிதிகள் அல்லது பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற நபர்களிடம் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.