/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலை, கைவினை திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு
/
கலை, கைவினை திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : டிச 13, 2024 10:35 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் கலை மற்றும் கைவினைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபடுவோருக்கு பயிற்சி, மானியத்துடன் கடன் மற்றும் சந்தைப்படுத்தும் திறன் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தையற் கலைஞர், மண்பாண்டம் செய்வோர், சிற்ப கலைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், அழகு கலை நிபுணர், மூங்கிலால் ஆன பொருட்கள் செய்வோர். தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர் உள்ளிட்ட பலவகையான கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபடுவோருக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் வாங்க 3 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும்.
கடன் தொகுதியில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் வழங்க தகுதி பெற்றவையாகும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும், 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். www.msmeonline.tn.gov.in என்ற இணைதளம் வழியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பாக கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151-294057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.