sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா

/

அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா

அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா

அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா


ADDED : ஏப் 16, 2025 11:57 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 1ம் தேதி 521ம் ஆண்டு சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு திருநங்கைகள் தாலி கட்டி, வான வேடிக்கையுடன், கரகாட்டம், மேளதாளம் முழங்க கூத்தாண்டவர் திருமண கோலத்தில் இந்திர விமானத்தில் வீதியுலா நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு அரவான் யுத்த கோலத்தில் தேர்பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடுகளை பலியிட்டு, தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.

மாலை 5:00 மணிக்கு அரவான் களபலி, இரவு 10:00 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி காட்டுக்குகை கோவிலுக்கு புறப்பட்டுச் செல்லும் வைபவம் நடந்தது. விழாவின் நிறைவாக வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்கு காட்டு கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா, நாட்டாமைகள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். இதில் திருநங்கைகள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us