ADDED : ஆக 20, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைரவர் சுவாமிக்கு வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சங்கரலிங்கர் சுவாமி சித்தர் பீடத்தில் உள்ள பைரவர் சுவாமிக்கு வளர்பிறை அஷ்டமி தினமான நேற்று மந்திர ஜெபம் வாசித்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சீனிவாசன் அடிகளார் பூஜையினை நடத்தினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
