/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழையால் சேதமான நெல் வயல் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
/
மழையால் சேதமான நெல் வயல் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
மழையால் சேதமான நெல் வயல் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
மழையால் சேதமான நெல் வயல் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : அக் 23, 2025 11:20 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் மழையால் சேதமான நெல் வயல்களை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடக்கிழக்கு பருவ மழையில் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணி ஆற்றில் இருந்து செல்லக்கூடிய ஏரி கால்வாய் முறையாக சீரமைக்காததால், கால்வாய் ஓட்டியுள்ள நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து, நெற்பயிர்கள் சேதமானது.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையொட்டி சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் நேற்று தியாகராஜபுரம், எஸ்.வி.பாளையம் கிராமங்களில் மழை நீர் புகுந்து சேதமான நெல் வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் அப்பாஸ் உடனிருந்தனர்.