ADDED : அக் 29, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: புதிதாக பொறுப்பேற்ற திருக்கோவிலுார் தாசில்தார் சரவணனை, கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருக்கோவிலுார் தாசில்தாராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் இராமதண்டபாணி தலைமையில், மாவட்ட பொருளாளர் ரஜினி, வட்ட செயலாளர் செந்தில் முருகன், வட்ட பொருளாளர் சித்ரா உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

