/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில்களில் பூட்டை உடைத்து திருட முயற்சி
/
கோவில்களில் பூட்டை உடைத்து திருட முயற்சி
ADDED : ஏப் 29, 2025 11:29 PM
உளுந்துார்பேட்டை:
உளுந்துார்பேட்டை அருகே இரு கோவில்களில், மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன் உண்டியல் பணம் மற்றும் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் பூட்டை உடைத்து, கோவிலுக்குள் வந்த மர்ம நபர்களால், பணம் மற்றும் நகையை திருட முடியாமல் திரும்பி சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து மர்ம நபர்கள், அடுத்த சில நிமிடங்களில், அதே பகுதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூட்டை உடைத்தனர்.
அந்த கோவிலின் இரு கதவுகளின் பூட்டு உடைத்து உள்ளே சென்றவர்களால், மூன்றாவது கதவின் பூட்டை உடைக்க முடியவில்லை. இதனால் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

