ADDED : ஆக 14, 2025 12:58 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட இணை செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் இளமுருகு, மாவட்ட மகளிரணி செயலாளர் ராணி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.
மாநில துணை தலைவர் ராம கோவிந்தன் கண்டன உரையாற்றினார். அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாிகள் பாபு கென்னடி, சரஸ்வதி, ரமேஷ், திருஞானசம்பந்தம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட பொருளாளர் கலாநிதி நன்றி கூறினார்.