/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன முகவர்கள் அங்கீகாரம்: ஆர்.டி.ஓ., அறிவிப்பு
/
வாகன முகவர்கள் அங்கீகாரம்: ஆர்.டி.ஓ., அறிவிப்பு
ADDED : பிப் 10, 2025 10:50 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் வாகன முகவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர் செய்திக்குறிப்பு:
சமீப காலங்களில் 2 மற்றும், 3வது என அடுத்தடுத்து கைமாறும் வாகனங்களை பதிவு செய்வதில் சட்டபூர்வ உரிய ஆவணங்கள் கண்டறியப்படாததால் சிக்கல் எழுகிறது. பழைய வாகனங்களை வாங்குபவர்கள் மட்டுமின்றி, வாகன உரிமையாளரை கண்காணிக்க முடிவதில்லை. இதனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்போர் முறையான அங்கீகாரம் பெற வேண்டும். வாகன முகவர்கள் சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பித்து அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

