sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மரத்தில் ஆட்டோ மோதி விபத்து முதியவர் பலி: 10 பேர் படுகாயம்

/

மரத்தில் ஆட்டோ மோதி விபத்து முதியவர் பலி: 10 பேர் படுகாயம்

மரத்தில் ஆட்டோ மோதி விபத்து முதியவர் பலி: 10 பேர் படுகாயம்

மரத்தில் ஆட்டோ மோதி விபத்து முதியவர் பலி: 10 பேர் படுகாயம்


ADDED : செப் 28, 2024 07:29 AM

Google News

ADDED : செப் 28, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் இறந்தார் 10 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முத்தாள், 45; நாகமணி, 60; மணிகண்டன் மனைவி மகேஸ்வரி, 40; உள்ளிட்ட அதே ஊரைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என பலர் ஆதிதிருவரங்கம், அரங்கநாதர் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

பாதயாத்திரையில் நடக்க முடியாத 10 பேர், உடன் வந்த ஆட்டோவில் பயணித்தனர். ஆட்டோவை மாம்பழப்பட்டு ஆறுமுகம் மகன் அருண், 25; ஓட்டினார்.

நேற்று மாலை 4:00 மணியளவில் மணலுார் பேட்டை சாலையில், சொரையப்பட்டு ஏரி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர புளிய மரத்தில் மோதியது.

இதில் பழனி, 65; என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காயம் அடைந்த 10 பேர் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் டிரைவர் அருண், நாகமணி, 60; விஜயலட்சுமி, சிவா மனைவி உமா, 25; மகள் பிரபாவதி, 3; ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மணலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us