ADDED : டிச 31, 2024 04:36 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன், 38. ஆட்டோ ஓட்டுனரான இவர், நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை போலீஸ் நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றார்.
நேற்று காலை வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இது குறித்து காத்தவராயன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே காத்தவராயன் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோ காணாமல் போனது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த பதிவை பார்த்தவர்கள் பிடாகம் அருகே ஆட்டோ செல்வதாக கொடுத்த தகவலின் பேரில் காத்தவராயன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு விரைந்தனர். அங்கு ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரதிதாசன், 30, ஆட்டோவை திருடி சென்றது தெரிய வந்தது. ஆட்டோவை திருடி சென்ற பாரதிதாசனையும், ஆட்டோவையும் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து பாரதிதாசனை கைது செய்தனர்.