/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
/
விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
விருதுகள் பெற்ற கலைஞர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
ADDED : நவ 29, 2024 07:01 AM

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் பெற்ற, கள்ளக்குறிச்சி மாவட்ட கைவினை கலைஞர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவில், கைவினை கலைஞர்களுக்கு ரொக்க பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்ந்த கைவினை கலைஞர்களும் விருதுகள் பெற்றனர்.
அதில் தனி நபர்களுக்கு 4 கிராம் தங்க காசு, 50 ஆயிரம் காசோலை, குழு உற்பத்தி விருதாக 4 கிராம தங்ககாசு, 40 ஆயிரம் காசோலை, மாவட்ட கைத்திறன் விருதாக 3 பேருக்கு தலா 5 கிராம் வெள்ளி பதக்கம் மற்றும் 10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விருதுகள் பெற்ற கைவினை கலைஞர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த்தை சந்தித்து பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், கைவினை கலைஞர் சக்திவேல் உட்பட கைவினை கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.