/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூன் 19, 2025 07:22 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 'என் குப்பை, எனது பொறுப்பு' தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆணையர் திவ்யா உறுதி மொழி மேற்கொண்டார்.
மாணவிகள் நகரை தூய்மையாக ஒவ்வொரு நபரும் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் பேரணியை வழிநடத்தி சென்றனர்.