ADDED : ஜூலை 27, 2025 03:58 AM
ரிஷிவந்தியம்,:வாணாபுரம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம் நடந்தது.
கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நுகர்வோர் சங்க செயலாளர் மணி வரவேற்றார். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, அரியலுார் ஊராட்சி தலைவர் வசந்தகுமாரி லிங்கநாதன், பகண்டை கூட்ரோடு சப்இன்ஸ்பெக்டர் சேட்டு, நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கண்ணன், சம்பத், சீதாபதி, தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.