/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு பிரசாரம்
/
அரசு பள்ளியில் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜூன் 05, 2025 06:46 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலால் அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். தலைமை காவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் மணிமாறன், போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசி, பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
ஆசிரியர் அனந்தகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தஜோதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
ஆசிரியர் ஹெலன் ஜெயா நன்றி கூறினார்.