ADDED : மார் 28, 2026 11:26 PM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சி சார்பில், 'என் வாக்கு, என் உரிமை' உறுதி மொழி விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
திருக்கோவிலுார் நகராட்சி சார்பில், ஐந்து முனை சந்திப்பில், வாக்காளர் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட் மற்றும் உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையர் திவ்யா வரவேற்றார். திருக்கோவிலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கி உறுதிமொழி விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
