/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண் குழந்தைகளுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு
/
பெண் குழந்தைகளுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு
ADDED : அக் 11, 2024 07:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் மகளிர் அதிகார மையம் சார்பாக பெண் குழந்தைகளுக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்தியினை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்தியுடன் மாவட்ட மகளிர் அதிகார மைய அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். பள்ளிகளில் குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் குழந்தைகளுக்கான வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகிய திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உட்பட பலர் உடனிருந்தனர்.