/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஏ.கே.டி., பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 29, 2024 06:57 AM
கள்ளக்குறிச்சி: ஏ.கே.டி., பள்ளியில் சென்னை ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், வாழ்க்கை முறை மாற்றம்மற்றும் நிலையான வாழ்வுக்கான ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வெங்கடரமணன் வரவேற்றார். ராமச்சந்திரா உயர்கல்வி பேராசிரியரும், தலைவருமான டாக்டர் சங்கர் பங்கேற்று, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் நிலையான வாழ்வுக்கான ஆரோக்கியமான நடைமுறைகள் குறித்து பேசினார்.
அபாயகரமான மற்றும் உயிரி மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக், மருந்து மற்றும் மின்னணுக்கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்பு, பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடை பிடித்தல், சுகாதார முறைகள் குறித்து பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

