தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 03, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதியில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை சார்பில் காய்கறிகள் பொருட்களை கொண்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் மகளிர் திட்ட இயக்குனர் லலிதா மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

அதேபோல் கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் விழிப்புணர்வு பேரணியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று வாக்காளர்களிடையே ஓட்டுபதிவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சின்னசேலம் அடுத்த ஏர்வாய்பட்டினம் மற்றும் கல்லாநத்தம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மேலும் திருக்கோவிலுார் அடுத்த பொன்னியந்தல் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் ரங்கோலி, மருதாணி வரைதல், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us