/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி
/
ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 10, 2024 11:24 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
தேர்தல் துணை தாசில்தார் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் இளையராஜா வரவேற்றார்.
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளராக தங்களை இணைத்து கொள்வது குறித்தும், தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவர்கள் கோஷமிட்டவாறு மந்தைவெளி வரை ஊர்வலமாக சென்றனர். இதில் வருவாய்த்துறையினர், அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.