ADDED : ஆக 17, 2026 04:47 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் எஸ்.எஸ்.கே., இண்டர்நேஷனல் பள்ளி சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் திருக்கோவிலுார் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. அறக்கட்டளை உறுப்பினர் சிந்துசெந்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், பங்கேற்ற மாணவர்கள், போதைப் பொருள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
பள்ளியின் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் செந்தில், தாளாளர் அஸ்வின் பாலாஜி, பள்ளி முதல்வர் மகாலட்சுமி பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்திச் சென்றனர்.
