ரிஷிவந்தியம் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ரிஷிவந்தியம் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : பிப் 28, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் (பொ) குப்புசாமி தலைமை தாங்கினார். பேராசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் தாசில்தார் வெங்கடேசன் பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்து, தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் நாகேஸ்வரில தாரண்யா, செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
