/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ADDED : ஜூலை 28, 2025 10:06 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்த மூன்று நாள் விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்த மூன்று நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு சேலம் சாலை தனியார் ஓட்டலில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் கருத்தரங்கை துவக்கி வைத்தார். கருத்தரங்கில், பெண்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளை கையாளும் துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்கள், மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு, மேம்பாடு சட்ட, திட்டங்கள் குறித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான துறை சார்ந்த வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.