ADDED : டிச 26, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சித்ரா, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் மன நலன் மேம்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினர்.
கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் விஜயசாந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார்.

