sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஜன 30, 2026 07:24 AM

Google News

ADDED : ஜன 30, 2026 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) குப்புசாமி தலைமை தாங்கினார். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்ட துணைத் தலைவர் இளையபெருமாள், பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மனநல மருத்துவர் பிரவீனா, போதைப்பொருள் எவ்வாறு சமூகத்தில் கலக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மன நலபாதிப்பு, உடல் பாதிப்பு. குடும்பத்தின் எதிர்காலம், தற்கொலை எண்ணம், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வது எப்படி, போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக அரசு மேற்கொள்ளும் தடுப்பு மற்றும் வழிகாட்டி மையங்கள் குறித்து பேசினார்.

தொடர்ந்து, போதைப்பொருள் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேராசிரியர்கள் முருகப்பிள்ளை, புவன்ராஜ், தாரண்யா, முருகசாமி, செல்வராஜ் விக்ரம், ஆனந்தகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.

மாணவர் துரை நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us