/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., கல்லுாரியில் பேட்மின்டன் போட்டி
/
ஏ.கே.டி., கல்லுாரியில் பேட்மின்டன் போட்டி
ADDED : அக் 12, 2025 10:35 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் பேட்மின்டன் போட்டி நடந்தது.
போட்டிகளை ஏ.கே.டி., பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சாமுவேல் சீலன் முன்னிலை வகித்தார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 12 கல்லுாரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்ற போட்டிகளில் விழுப்புரம் ஐ.எப்.இ.டி., கல்லுாரி முதலிடம், மதுராந்தகம் ஆதிபராசக்தி கல்லுாரி இரண்டாமிடம், கடலுார் சி.கே. கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் பரிசு வழங்கி பாராட்டினார்.