ADDED : மே 29, 2026 04:10 AM

கள்ளக்குறிச்சி: பக்ரீத் பண்டிகையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்புத் தொழுகை நடந்தது.
முன்னதாக நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள ஜிம்மா பள்ளி வாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர். தொடர்ந்து அனைத்து பள்ளி ஜாமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடந்தது.
நடுத்தக்கா, அண்ணா நகர், காட்டுபுரி தக்கா, கோட்டைமேடு, ஏ.கே.டி.,நகர், வ.உ.சி., நகர், கரியப்பா நகர் ஆகிய பள்ளி வாசல்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். தொழுகைக்குப்பின், ஒருவரையொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சின்னசேலம் மூங்கில்பாடி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. அம்சாகுளம் பள்ளி வாசல், நடுபள்ளி பள்ளி வாசல், அண்ணா நகர் பள்ளிவாசல், கிழக்கு பள்ளிவாசல் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இதபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடந்தது.
