ADDED : ஜன 29, 2026 06:55 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி சுரேஷ் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் செல்லதுரை, விஸ்வநாதன், ஏழுமலை, சுரேஷ், சின்னதுரை, கலைவாணி, பார்த்தசாரதி, வளவன், மகேந்திரன், அபிநயா, அருள்மொழி, பாரதிராஜா உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
