/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உண்டியல் உடைப்பு போலீஸ் விசாரணை
/
உண்டியல் உடைப்பு போலீஸ் விசாரணை
ADDED : அக் 25, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் அய்யனார் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் அய்யனார் கோவிலில் சிமன்ட் கட்டை கட்டி அதற்குள் இரும்பால் ஆன உண்டியல் வைக்கப்பட்டிருந்து. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கோவில் உண்டியல் மேல் முடியை உடைத்து காணிக்கை பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.
சிமன்ட் கான்கிரீட் போட்டு உண்டியல் வைக்கப்பட்டிருந்ததால் முழுமையாக உண்டியலை உடைத்து காணிக்கையை திருட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.