கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி
ADDED : ஜூன் 26, 2026 03:54 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய இந்திய எழுத்தறிவு திட்டத்தின் கீழ், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம் மூலம் 20 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி கற்பிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும் அடிப்படை படிப்பறிவு மற்றும் எழுத்தறிவு இல்லாத நபர்களை கண்டறியும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது.
இதில், மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்து 11 பேர் கண்டறியப்பட்டனர். தொடர்ந்து, இவர்களுக்கு 800 மையங்களில், தன்னார்வலர்கள் மூலமாக அடிப்படை எழுத்தறிவு பயிற்சி கற்பிக்கும் பணி தொடங்கியது.
கள்ளக்குறிச்சி அடுத்த கடத்துார் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த அடிப்படை எழுத்தறிவு பயிற்சி முகாமினை சி.இ.ஓ., கார்த்திகா தொடங்கி வைத்து, இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து பேசி புத்தகங்களை வழங்கினார். அப்போது, மாவட்ட உதவி திட்ட அலுவலர் கலாநிதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
