/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரிகளில் குளிக்க, செல்பி எடுக்க தடை விதிக்கப்படுமா?: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
/
ஏரிகளில் குளிக்க, செல்பி எடுக்க தடை விதிக்கப்படுமா?: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ஏரிகளில் குளிக்க, செல்பி எடுக்க தடை விதிக்கப்படுமா?: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ஏரிகளில் குளிக்க, செல்பி எடுக்க தடை விதிக்கப்படுமா?: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ADDED : நவ 01, 2024 11:26 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. பொது மக்கள்,சிறுவர்கள் ஆற்றில் குளிப்பதையும், செல்பி எடுப்பதையும் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சங்கராபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கல்வராயன் மலையில் பெய்த கன மழையால் மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சங்கராபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தொடர் மழையால்கோமுகி அணை நிரம்பியதால் வினாடிக்கு 400 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோமுகி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சங்கராபுரம் பகுதியில் உள்ளவிவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பல மாதங்களுக்குப்பின் நிரம்பியுள்ள மற்றும் தண்ணீர் தேங்கி யுள்ளஏரி குளங்களை பார்வையிட இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் செல்கின்றனர். அங்கு குளிப்பதையும், செல்பி எடுப்தையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்போது போட்டி போட்டுக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்று செல்பி எடுக்கும்போதும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கிறது.
குறிப்பாகசங்கராபுரம் பகுதியில் உள்ள பல ஏரிகளில் இரவு பகலாக வண்டல் மண் எடுக்கப்பட்டு வருவதால் பல இடங்களில் மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளது.
இந்த இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ஆழம் தெரியாமல் இளைஞர்கள் நீரில் முழ்கி இறக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதுபோன்று மழைக்காலங்களில் சங்கராபுரம் பகுதிகளில் நிரம்பிய ஏரியில் குளித்த 10க்கும் மேற்பட்டோர்நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
தற்போது சங்கராபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராம ஏரிகள் நிரம்பியும், ஆறுகளில்அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கிராமப்புற ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இறங்கி குளிக்கக்கூடாது என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் ஒலிபெருக்கி முலம் நீர்நிலைகளுக்கு சிறுவர்கள் தனியாக செல்லக்கூடாதுஎன்ற அறிவிப்பினையும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.