/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அழகு கலை பயிற்சி : விண்ணப்பம் வரவேற்பு
/
அழகு கலை பயிற்சி : விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 02, 2025 07:32 AM
கள்ளக்குறிச்சி : தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின இளைஞர்களுக்கு அழகுகலை, சிகை அலங்கார பயிற்சிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அழகுகலை மற்றும் சிகை அலங்கார பயிற்சிவழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள்இருக்க வேண்டும் .
சென்னையில் தங்கி படிக்கும் வசதியுடன், 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு பெற்று, ஆரம்ப கால மாத சம்பளம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம்ரூபாய்வரை பெறலாம்.
பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.