கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்தவர்களில் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
கல்வி கற்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் என 650 மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்றனர்.
முகாமை ஆய்வு செய்த கலெக்டர் பிரசாந்த் கூறுகையில், 'முகாமில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2024-25ம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு பெற்று, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். மேலும் அரசு நலத்திட்ட உதவிக்கோரி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் போது உரிய சான்றிதழ்களுடன், தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்தால் நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படும்' என்றார்.