sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாக்கு மரக்கன்றுகள் விற்பனைக்கு தயார்

/

பாக்கு மரக்கன்றுகள் விற்பனைக்கு தயார்

பாக்கு மரக்கன்றுகள் விற்பனைக்கு தயார்

பாக்கு மரக்கன்றுகள் விற்பனைக்கு தயார்


ADDED : ஜூன் 01, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பாக்கு மரக்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக, தோட்டக்கலை துணை இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு :

உளுந்துார்பேட்டை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு தேவையான மா ஒட்டு செடிகள், கொய்யா, பெரு நெல்லி, எலுமிச்சை மற்றும் காய்கறி நாற்றுகள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் பாக்கு மரம் பரவலாக சின்னசேலம், கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை மற்றும் சங்கராபுரம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டத்தில் 350.32 ஹெக்டர் பரப்பளவில் பாக்கு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அரசு தோட்டக்கலைப் பண்ணையில் விவசாயிகள் பயன் அடையும் வகையில், இந்தாண்டில் 4 ஆயிரம் உள்ளூர் ரக

பாக்கு மரக்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு மரக்கன்றின் விலை ரூ.15.

பாக்கு சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், சின்னசேலம் 78119 67632, கள்ளக்குறிச்சி 80983 27732, வெள்ளிமலை 97872 37737, சங்கராபுரம் 98667 14589 மற்றும் அரசு தோட்டக்கலைப் பண்னை மேலாளர் 91595 46757, ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us