ADDED : ஜூலை 19, 2025 03:01 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகத்தின், 48ம் ஆண்டு கபிலர் விழா துவங்கியது.
திருக்கோவிலுார் சுப்ரமணிய மஹாலில் துவங்கிய விழாவில், காலை 8:30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஜீவசீனுவாசனின் இறை வணக்கத்துடன், 11:00 மணிக்கு ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் விழாவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முனைவர் சற்குணம், 'பாடல் பட்டி மன்றங்கள்' தலைப்பிலும், ராதாகிருஷ்ணன் 'ஆழ்வார்களின் அமிர்தத் தமிழ்' தலைப்பிலும், முனைவர் ஜனசக்தி, 'தமிழின் அடையாளம் குறிஞ்சிக் கபிலர்' தலைப்பில் பேசினர்.
மாலை 5:30 மணிக்கு பண்பாட்டுக் கழக தலைவர் முருகன் தலைமையில் உரையரங்கம் நடந்தது. லால்குடி எழில்செல்வன் 'பிள்ளைத் தமிழ்' தலைப்பிலும், திருப்புவனவாயில் சிவமாதவன் 'பிள்ளை தமிழ்' குறித்து ஆய்வு உரையாற்றினர்.
தொடர்ந்து பெங்களூரு ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலா மந்திர் விஜயலட்சுமியின் 'தசாவதாரம்' நாட்டிய அரங்கம் நடந்தது.