ADDED : டிச 12, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ராமராஜன், ஏழுமலை, தமிழ் சங்க தலைவி மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். சங்க நிறுவனர் ராசகோபால் வரவேற்றார். நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ் சங்க காப்பாளர் முத்தமிழ்முத்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, தமிழ் பற்று, எழுதிய பாடல்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு கூறப்பட்டது. உடற்கல்வி இயக்குநர் அரிஹரன் நன்றி கூறினார்.