ADDED : டிச 13, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் கிராமத்தில் பாரதியார் 143வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கார்குழலி அறக்கட்டளை தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். அ.பாண்டலம் ஊராட்சி துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். ரிஷிவந்தியம் தமிழ் சங்க தலைவர் ராஜகோபால் வரவேற்றார்.
பாரதியார் படத்திற்கு அ.பாண்டலம் ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரைமுருகன் பாரதியாருக்கு புகாழாரம் சூட்டினார். சங்கீதா நன்றி கூறினார்.

