/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
ADDED : டிச 13, 2024 07:05 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ரவிசங்கர், நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர் சபரிநாதன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயசீலன் உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்று, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, பாடல்கள் குறித்து பேசினார்.
பாரதியார் பிறந்தநாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உதவி பேராசிரியர்கள் அருள், பாக்கியலட்சுமி, பிரவீனா, சரோஜாதேவி, விஜயா ஆகியோர் செய்திருந்தனர். மாணவி பிரதீபா நன்றி கூறினார்.

