/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கு பூமி பூஜை
/
ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கு பூமி பூஜை
ADDED : நவ 22, 2024 07:02 AM

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் ஊரக வேலை திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு பி.டி.ஓ., சவுரிராஜன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாந்த், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பரமணியன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் சன்முகம் வரவேற்றார். ஒன்றிய துணைச் சேர்மன் அன்பு மணிமாறன் பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் சின்ன மணி, ஒன்றிய கவுன்சிலர் நந்தினிமோகன், வார்டு உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலாளர் அருள்மொழி நன்றி கூறி னார்.